இஸ்ரேலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் எந்தவொரு அரசியல் அணிக்கும் தெளிவான நாடாளுமன்றப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆகியோர் கூட்டணி அமைப்பது தொடர்பான கடினமான பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முழுமையான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (Knesset) நெதன்யாகு தலைமையிலான அணி 53 ஆசனங்களையும், காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணி 48 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
அதேவேளை, அரபு தலைமையிலான கட்சிகள் இணைந்து 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதற்குப் நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 61 ஆசனங்கள் அவசியமாகும். இதனால், அரபு தலைமையிலான கட்சிகள் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய நிலையைப் பெற்றுள்ளன.
இதற்கமைய, அடுத்த கட்டமாக அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறவுள்ளன.
தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், புதிய நாடாளுமன்றம் நவம்பர் 10ஆம் திகதி பதவியேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








