சவூதி அரேபியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் மன்னர் காலித் பின் சல்மான் அல் சவூத் மற்றும் ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இது தொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சவூதி பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








