கொழும்பு துறைமுக நகரில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து, கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








