தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








