இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை ஆகியவற்றை பிரெய்லி (Braille) முறையில் தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் ஊடாக, நாட்டிலுள்ள கண்பார்வையற்ற சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வகிபாகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை குறித்து அடிப்படை அறிவையும் புரிதலையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊடாக, நாட்டிலுள்ள அனைத்துச் சிறுவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
எந்தவொரு குழந்தையையும் புறக்கணிக்காமல், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் தகவல்களை இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்பை ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதிப்படுத்துவதே அமைச்சின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.








