பிரதிசபாநாயகர் தலைமையில் இன்றைய (09) பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் வருமாறு:
மு.ப. 9.30 – மு.ப. 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான ஏற்பாடுகளுக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00
வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன:
- தியகம வனத்தைப் பாதுகாத்தல் – கலாநிதி ஹர்ஷ டி சில்வா.
- புத்தளம் புகையிரதப் பாதையில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்தல் – சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டு.
- 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிதல், அவற்றால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் இத்தகைய வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான விதப்புரைகளை முன்வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல் – அமிர்தநாதன் அடைக்கலநாதன்.
- வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அவற்றை அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையைத் தயாரித்தல் – லசித் பாஷண கமகே.
- இலங்கையிலுள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழகப் பீடங்களாக மாற்றுதல் – சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி.
- நுண்நிதிக் கடன்களைப் பெற்று அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்தல் – சமிந்த விஜேசிறி.
- இலங்கையின் விளையாட்டு அமைப்புகளை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுவித்தல் – ரவி கருணாநாயக்க.
பி.ப. 5.00 – பி.ப. 5.30
எதிர்க்கட்சியினால் ஒத்திவைப்பு வேளையின் போது முன்வைக்கப்படும் பிரேரணை.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பைக் கீழே காணலாம்.








