அப்ரா அன்சார்
இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ் (CARNAGE), செனகல் தலைநகர் டாக்கரில் நடைபெற்று வரும் 4ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக இணைந்துள்ளது.
இதன் மூலம், நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதிலும் உள்ளூர் விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவிப்பதிலும் தனது பங்களிப்பை கார்னேஜ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுடன் கார்னேஜ் நிறுவனம் மேற்கொண்டுள்ள விரிவான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகவே இந்த அனுசரணை அமைந்துள்ளது.
இம்முறை இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் தடகளம், நீச்சல், பெட்மிண்டன் மற்றும் டைக்வாண்டோ ஆகிய நான்கு விளையாட்டுப் பிரிவுகளில் ஐந்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பில் கார்னேஜ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜொயல் திலகரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பது எப்போதும் கார்னேஜ் நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வருகிறது. எமது நாட்டில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் தமது முழுமையான திறமையை வெளிப்படுத்துவதற்கு முறையான வழிகாட்டலும் ஆதரவும் அவசியம் என்பதை நாம் அறிவோம்.
இலங்கையின் முன்னணி வர்த்தக நாமம் என்ற வகையில், வீரர்கள் சர்வதேச அரங்கை அடைந்த பின்னர் மாத்திரம் அவர்களைக் கொண்டாடாமல், அவர்களின் வளர்ச்சிப் பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே உடன்நிற்பதை எமது பொறுப்பாகக் கருதுகிறோம்.
எமது கூட்டாண்மைகள் மற்றும் கார்னேஜ் விளையாட்டு வீரர் அறக்கட்டளை (CARNAGE Athlete Foundation) ஊடாக, வீரர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு, வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் சர்வதேச அளவில் நம்பிக்கையுடன் போட்டியிட வழிவகுப்பதே எமது இலக்காகும்” எனக் குறிப்பிட்டார்.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பது என்பது வெறுமனே வணிக ரீதியான விளம்பர நடவடிக்கை மாத்திரமல்ல. அவர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து, அவர்களது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதே கார்னேஜ் நிறுவனத்தின் நோக்கமாகும்.
வெற்றியை அடையும்போது மாத்திரமன்றி, அந்த வெற்றியை நோக்கிய முழுப் பயணத்திலும் வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதில் கார்னேஜ் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கையின் முன்னணி உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை ஆடை வர்த்தக நாமமான கார்னேஜ், நாட்டின் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்கு வழங்கி வரும் பரந்தளவிலான அர்ப்பணிப்புக்கு, டாக்கர் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அதன் பங்களிப்பு மற்றுமொரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
‘அடுத்த தலைமுறை சம்பியன் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல்’ என்ற நோக்கத்துடன் இயங்கும் கார்னேஜ் விளையாட்டு வீரர் அறக்கட்டளை, ஏற்கனவே பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கார்னேஜ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சர்வதேச அரங்கில் இலங்கையின் விளையாட்டு ஆற்றலையும் பெருமையையும் பிரதிபலிக்கும் தூதுவர்களாகவே கருதப்படுகின்றனர்.
அத்தகைய ஆற்றலை உருவாக்குவதற்கு நிறுவனங்களின் முதலீடுகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகள் இன்றியமையாதவை. விளையாட்டு வீரர்களின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெருநிறுவனங்கள் கரம்கொடுப்பதன் மூலம், சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய வலுவான விளையாட்டுச் சூழலை இலங்கையில் உருவாக்க முடியும்.










