2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வீட்டுப் பொருளியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 10 முதல் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 44 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்காக இந்தச் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.










