வேகமாகப் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் முன்னெடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 30 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








