பேராதனை மற்றும் கெலிஓயா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட அகுணாவல பகுதியில் இன்று (5) மாலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இன்று மாலை 6.20 மணியளவில் ரயில் மார்க்கத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் குறித்த ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மண்மேட்டை விரைவாக அகற்றி, ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.








