வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக Wafa செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி Wafa இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காசாவில் 1,400-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சிறுவர் ஒருவர் உட்பட பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக Wafa தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் நகரின் கிழக்குப் பகுதிகளிலும் பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








