ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.








