2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) அன்டிகுவா மற்றும் பார்புடா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (31) முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின்போது, பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொதுவான விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.








