ஐரோப்பிய குளிர்காலப் பருவத்தில் இலங்கைக்குப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு, இந்த ஆண்டு மூன்று விமான நிறுவனங்கள் இலங்கைக்கான தமது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.
இதன்படி, ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட Azur Air விமான நிறுவனம் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் விமான நிறுவனமான French Bee, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பருவகால விமான சேவைகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்த விமானங்கள் மாலைதீவு ஊடாக இயக்கப்படவுள்ளன.
இதேவேளை, ரஷ்யாவின் S7 Airlines விமான நிறுவனமும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சைபீரியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) நகரிலிருந்து கொழும்புக்கு வாரத்திற்கு இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன








