தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருள் தொகையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரு வெவ்வேறு சோதனைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது சோதனையின்போது, 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது சோதனையின்போது, 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








