தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, காலி மாவட்டத்தின் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை (21) மாலை 7.00 மணி வரை அமலில் இருக்கும் என NBRO தெரிவித்துள்ளது.








