பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியமளித்ததாகக் கூறப்படும் சாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாலித கமகே என்ற சாட்சி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாக நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து, பொய் சாட்சியமளித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த சாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
பின்னர், குறித்த சாட்சியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.