நீர் வழங்கல் சபையின் கீழ் கடல்நீரை சுத்திகரிக்கும் மூன்று திட்டங்கள் தற்போது செயற்பாட்டில் உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான அரசின் தயார்நிலை தொடர்பில் இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நீர் வழங்கல் சபையினால் நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் கனமீற்றர் நீர் சுத்திகரிக்கப்படுவதாகவும், இதற்காக பல்வேறு நீர் மூலங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 59 நிலத்தடி நீர் மூலங்களில் இருந்து நாளொன்றுக்கு 77,000 கனமீற்றர் நீரும், 59 நீர்த்தேக்கங்களில் இருந்து சுமார் 712,000 கனமீற்றர் நீரும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தினசரி நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான மீதமுள்ள சுமார் 22 இலட்சம் கனமீற்றர் நீர் ஆறுகள், ஓடைகள் மற்றும் ஏனைய நீர் மூலங்களில் இருந்து பெறப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.









