இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று (10) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.









