யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.









