நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவலின்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட மொத்தம் 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 200 பேர் பெண்கள் என்றும் 203 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போன வெளிநாட்டவர்கள் 26 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.
சுற்றுலா ஏற்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இந்தியா–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவருக்குச் செல்லும் வழியில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









