பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட போது குறித்த பிரிவில் 16 குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிரிவில் சூழ்ந்துள்ள புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.









