இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படை தளபதியான ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 2026 செப்டெம்பர் 1ஆம் திகதி தனது புதிய பதவிப் பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.
இலங்கை கடற்படையின் 26வது கடற்படை தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற காஞ்சன பாகொட, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சிறப்பான சேவையாற்றியுள்ள மூத்த முப்படை அதிகாரி ஆவார்.









