கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் SLS 517 தரச்சான்று முத்திரையின்றி மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், LSS ரக தலைக்கவசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தலா ரூ.1,800க்கு விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதுதொடர்பான வழக்கில் நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.









