நீதிபதிகளின் சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்னர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அனுபவமும் அறிவும் கொண்ட நீதிபதிகளின் சேவைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் நோக்கில், அவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை, நீதித்துறையின் சுதந்திரத்தையும் அதிகாரப் பகிர்வின் கொள்கையையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு சட்டத் திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், அது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெறப்பட வேண்டும் எனவும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.









