Universal Gateway Holdings (Pvt) Ltd நிறுவனம் இலங்கையின் உணவு மற்றும் பானத் துறையில் தனது வர்த்தகப் பரப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஒரே வளாகத்தில் Thai Fusion மற்றும் Global Kitchen எனும் இரண்டு புதிய உணவகத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்விரு உணவகங்களும் ஆகஸ்ட் 18ஆம் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், அமைச்சர்கள், வர்த்தக சமூகத்தினர், நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் விசேட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
90, Davidson Road என்ற முகவரியில் அமைந்துள்ள Global Kitchen உணவகத்தை பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் Universal Gateway Holdings நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் மொஹமட் அஃப்தாப் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் உள்ளிட்ட இராஜதந்திர பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தரைத்தளம் மற்றும் மெஸனின் தளத்தில் அமைந்துள்ள Thai Fusion, உண்மையான தாய் உணவு அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து நேரடியாக அழைத்து வரப்பட்ட சமையல் கலைஞர்களால் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய சாலட்கள், சூப்கள், கறிகள், கடல் உணவுகள், சாதம் மற்றும் நூடுல்ஸ் வகைகள், தாய் இனிப்புகள் மற்றும் பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் இங்கு வழங்கப்படுகின்றன.
முதலாம் தளத்தில் அமைந்துள்ள Global Kitchen, பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பல்சுவை உணவகமாக அமைந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் ஸ்டீக் மற்றும் குர்மே பர்கர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், பாகிஸ்தான், சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச உணவு வகைகளும் இங்கு கிடைக்கின்றன.
Universal Gateway Holdings நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் மொஹமட் அஃப்தாப் தெரிவிக்கையில், இந்த புதிய உணவகங்களின் அறிமுகம் நிறுவனத்தின் நீண்டகால உணவு மற்றும் பானத் துறை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்.
தரமான உணவு, தொடர்ச்சியான சேவைத் தரம் மற்றும் மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்கக்கூடிய வலுவான உணவகக் கருத்தாக்கங்களை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் எனவும், Thai Fusion உணவகத்தின் மூலம் உண்மையான தாய் உணவு அனுபவத்தை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Universal Gateway Holdings ஏற்கனவே Indian Summer Restaurants என்ற பிரபலமான இந்திய உணவக வர்த்தகநாமத்தை கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் காலி உள்ளிட்ட நகரங்களிலும், மாலைதீவிலும் நடத்தி வருகின்றது.
இலங்கையில் புதிய உணவு வகைகள் மற்றும் தனித்துவமான உணவகக் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நாட்டின் முக்கிய நகரங்களிலும் Thai Fusion வர்த்தகநாமத்தை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் மொஹமட் அஃப்தாப் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் எதிர்காலத்தில் இந்தோனேசிய உணவக உரிமைக் கிளை (franchise) ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படங்கள்: எம்.எஸ்.எம் சலீம்











