பாப் அல்-மந்தப் நீரிணையில் அடையாளம் தெரியாத வர்த்தகக் கப்பல் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக யெமனின் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் ஹூதி அமைப்பினால் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும் நிலையில், அவை தொடர்ந்து அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகமான அல்ஜெசீரா தெரிவித்துள்ளது.
அப்ரா அன்சார்









