(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மட்டக்களப்பு வெவர் மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கைப்பந்து (Handball) சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான 17 மற்றும் 20 வயது பிரிவுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி 3ஆம் நிலையைப் பெற்று (2nd Runner up) மீண்டும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவான மாணவர்களையும், இம் மாணவர்களை போட்டிக்காக சிறப்பாக பயிற்சியளித்து அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர் எம்.வை.எம் றகீப், எம்.எம். றஜீப், எஸ்.எம். உபைடீன் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.யூ.ஏ. சம்லி, ஏ.எம். ஜப்ரான் மற்றும் உடற்கல்வி பிரிவினர் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜாபீ்ர் (SLEAS) இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ்.முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.









