லங்கா பிரிமியர் லீக் தொடரின் 23.7.2026 இடம்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கிலன்ட்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய கோல் கிலன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
கோல் கிலன்ட்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷான் ஆராய்ச்சிகே அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 194 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் துனித் வெல்லாகே அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் கோல் கிலன்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.








