அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வீடொன்றிலிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதற்கு தயாரான வேளையிலேயே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞராவார்.
சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 204 கிராம் 660 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் 17.8.2026 பலபிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.









