இலங்கையில் இவ்வருடம் இதுவரை 92,254 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அப்பிரிவின் அண்மைய தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 6,914 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 19,671 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 18,289 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,635 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,040 பேரும் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 5,964 பேரும், காலி மாவட்டத்தில் 5,063 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,946 பேரும் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.








