பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
சர்வதேச கிரிக்கெட் சபை ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, ரி-20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.