இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி பங்காதேஷ் அணியை 28 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 175 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.