பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரிசெலுத்துனர் அடையாள இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
மக்களுக்கு இலகுவாக தனிநபர் வரி இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இதன் மூலம் அரசாங்க வருமானம் குறித்து தெளிவான தரவு அமைப்பு உருவாக்கப்படுமென்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப்பயன்படுத்தி, இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.