2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதிவரை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக குறித்த தொடருக்கான ஏலம் கடந்த டிசெம்பர் 19 ஆம் திகதி துபாயில் இடம்பெற்றது.
குறித்த ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
வர் 24.75 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.
அத்துடன், இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.