பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க பதில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
22.01.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன நாடு திரும்பும் நாள் வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.