3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக LAUGFS Gas PLC நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், இதன் மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்கள் இரு தரப்பினருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பல கட்டங்களாக விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்காக விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர், அவற்றின் கையிருப்பு தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எரிவாயு கையிருப்பு தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட LAUGFS எரிவாயு விநியோகஸ்தரைத் தொடர்புகொள்ளலாம்.
அல்லது நிறுவனத்தின் அவசர அழைப்புச் சேவையான 1345 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








