“அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம்” என பெயரிடப்பட்டுள்ள சட்டமூலத்தினால் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள், நலன்கள் தொடர்பில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அதற்கு எதிரான கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் பயனடையும் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போதைய பிரதம நீதியரசர் இருப்பார் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக்காலம் 2026 டிசம்பர் 1ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கிலேயே இந்த அரசியலமைப்புத் திருத்தம் அவசரமாக முன்னெடுக்கப்படுவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.









