நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (26) காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, நேபாளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீனப் பிரஜைகள் என சீன வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, திபெத் பகுதியில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளதாகவும், மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அப்பகுதியின் கடினமான புவியியல் அமைப்பு காரணமாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









