ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் இராணுவ ரீதியாக முழுமையாகக் கட்டுப்படுத்தி வருவதாக ஈரானிய இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கெஷ்ம் தீவு அருகே கடற்பரப்பில் இருந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தெற்கு ஈரானில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என சில ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரானிய ஆயுதப் படைகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடமிருந்து புதிய போர் அல்லது பதற்றம் ஏற்பட்டால் எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வான்வெளிப் படைத் தளபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.








