யெமனில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதி கட்டுப்பாட்டிலுள்ள சனா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 125 பேர் காயமடைந்துள்ளதாக ஹூதி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள Al Masirah செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்பு மற்றும் காயம் தொடர்பான தகவல்கள் ஹூதி நிர்வாகத்தின் சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை








