வங்கதேசத்தின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிக் கட்டணத்தை மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கணிசமாக அதிகரிக்க வங்கதேச கிரிக்கெட் சபை (BCB) தீர்மானித்துள்ளது.
BCB தலைவர் தமீம் இக்பால் அறிவித்துள்ள புதிய கட்டணத் திட்டத்தின்படி, முதற்தர போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 150,000 வங்கதேச டாக்கா (சுமார் 1,220 அமெரிக்க டொலர்) வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் 70,000 டாக்காவாக இருந்த இந்தக் கட்டணம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 100,000 டாக்காவாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, List A ஒருநாள் போட்டிகளுக்கான போட்டிக் கட்டணம் 50,000 டாக்காவிலிருந்து 100,000 டாக்காவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் T20 போட்டிகளுக்கான கட்டணமும் 40,000 டாக்காவிலிருந்து 80,000 டாக்காவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் வருமானத்தை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கட்டண உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக BCB தலைவர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் போட்டிக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டண முறையின் கீழ் நான்கு நாள், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக BCB தெரிவித்துள்ளது.









