சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அல்-கார்ஜ் பகுதிகளில் இரண்டாவது கட்டமாக அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், ஆபத்து நீங்கியுள்ளதாக சவுதி சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, தேசிய ஆரம்ப எச்சரிக்கை தளம் இரு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் எச்சரிக்கைகளை விடுத்து, பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியது.
பின்னர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆபத்து நீங்கியுள்ளதாக தெரிவித்த சிவில் பாதுகாப்பு, பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், கூட்டமாக கூடுவதையும் சம்பவங்களைப் படம் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவசர நிலை ஏற்பட்டால் 911 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.









