யெமனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இலக்கு வைத்து சவுதி அரேபியா 26 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரும் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹூதிகளின் கூற்றை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி அரேபியா சுமார் 300 தாக்குதல்களை நடத்தியதாகவும் ஹூதிகள் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, சவுதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யெமன் அரசாங்கப் படைகள், தாயிஸ் மாகாணத்தின் அல்-வசீயா மாவட்டத்தில் இடம்பெற்ற மோதல்களில் 30 ஹூதி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.
யெமனில் இந்த வாரம் மோதல்கள் தீவிரமடைந்துள்ள பல பகுதிகளில் அல்-வசீயாவும் ஒன்றாகும்.








