மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு எதிராக வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தீர்மானம் தொடர்பான அறிவிப்பை பிரித்தானிய பிரதமர் எண்டி பர்னம் இன்று (08) வெளியிடவுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற பின்னர், பிரதமர் மேற்கொள்ளும் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கைத் தீர்மானமாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிரித்தானியாவின் இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.









