இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியை இலஞ்சம் வழங்குமாறு தூண்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இன்று (02) காலை குறித்த பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பதிவாளர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








