முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








