கடுகன்னாவ பகுதியில் பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, குறித்த வீதியை நாளை (11) காலை 6.00 மணி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியூடான வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (10) பிற்பகல் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் மண்மேடும் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளன.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், பாறைகள் சரிந்து விழுந்ததில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுகன்னாவைக்கும் கனேதென்னவிற்கும் இடையிலான வீதிப் பகுதியை பொலிஸார் மூடியுள்ளனர்.








