இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சதுரங்க, Peak XV Partners நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்காசியா மற்றும் இந்தியாவுக்கான முன்னாள் தலைவருமான ராஜன் ஆனந்தனைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, தொழில்முனைவோர் முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் புத்தாக்கத்தின் பங்கு குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ராஜன் ஆனந்தன் எழுதிய Lift of the Nation என்ற புத்தகத்தையும் அவர் பரிசாக வழங்கியுள்ளார்.
புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தொடர்பான ராஜன் ஆனந்தனின் அனுபவங்களிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், அவருடனான தொடர்பைப் பேணவும் எதிர்பார்ப்பதாக சதுரங்க தெரிவித்துள்ளார்.







