பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் இன்று (24) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம். எஸ். அப்துல் வாஸித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்ரீதியாக சட்டத்தரணியான ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான், மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார்.
மேலும், அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளராகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார்.








